ரஷ்யாவில் கடும் தட்டுப்பாடு; இந்தியாவிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்ய பரிசீலனை
2 ஆடி 2026 வியாழன் 07:05 | பார்வைகள் : 1526
இந்தியாவில் இருந்து கடல்வழியாக பெட்ரோல் இறக்குமதியை தொடங்க ரஷ்யா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல், ரஷ்யாவின் சில பிராந்தியங்களில் கடும் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்கி இருக்கிறது. தட்டுப்பாடு குறித்து ரஷ்ய அதிபர் புடின், அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மற்ற நாடுகளில் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை ரஷ்யா தொடங்கி இருக்கிறது. பெலாரஸ் நாட்டில் இருந்து பெட்ரோலை ரஷ்யா இறக்குமதி செய்து வருகிறது. ஜூன் மாதத்தின் முதல் பாதியில் மட்டுமே கிட்டத்தட்ட 70,000 டன்களுக்கும் அதிகமான பெட்ரோலை பெலாரஸ் ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்து இருக்கிறது.
பற்றாக்குறையை மேலும் சரி செய்யும் வகையில், இந்தியாவில் இருந்து கடல் வழியாக பெட்ரோல் இறக்குமதியை தொடங்க ரஷ்யா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக, வரி விதிப்புச் சட்டத்தில் சில திருத்தங்களுக்கும் ரஷ்ய பார்லிமெண்ட் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விவரத்தை, உக்ரைனின் கீவ் போஸ்ட் என்ற பத்திரிகை அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
ரஷ்யாவின் வரைவுத் திருத்தங்கள், இந்தியாவில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கான தற்போதுள்ள மானிய முறையை மேலும் விரிவுபடுத்தும். இந்திய சந்தைகளில் உள்ள உத்தேச பெட்ரோல் விலை மற்றும் அந்நாட்டின் துறைமுகங்களில் இருந்து ரஷ்யாவுக்கு எரிபொருளை கொண்டு செல்லும் கப்பல்களின் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் இத்ந மானியம் கணக்கிடப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire