தவெக கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
2 ஆடி 2026 வியாழன் 08:11 | பார்வைகள் : 1127
தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சிகள் கூட்டம் ஜூலை 1 நடந்தது. இக்கூட்டத்தில் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இச்சூழலில், த.வெ.க., கூட்டணி கட்சிகளின் கூட்டம், சென்னை கோவளத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் திருமாவளவன், வைகோ, மாணிக்கம் தாகூர், காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சிகள் பலமாக உள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது, துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்து, கூட்டணி கட்சிகளுடன் விஜய் ஆலோசித்தார். கூட்டணி குறித்தும் விஜய் ஆலோசனை நடத்தினார்.
விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க., போட்டியிட உள்ளது. இதற்கு கூட்டணி கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக வரும் உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், கூட்டத்தில் விஜய் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இக்கூட்டம் 1.15 மணி நேரம் நடந்தது. இக்கூட்டம் முடிந்ததும், கூட்டணி கட்சி தலைவர்களுடன் தனித்தனியாகவும் விஜய் ஆலோசனை நடத்தினார்.
தலைவர்கள் பேட்டி
இந்த கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஆதவ், மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முஸ்லிம்லீக் கட்சித் தலைவர் காதர் மொகைதீன் உள்ளிட்டோர் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது மாணிக்கம் தாகூர் கூறியதாவது:
இக்கூட்டத்தில் அனைவரின் கருத்துகள் முதல்கட்டமாக பரிமாறப்பட்டது. இக்கூட்டம் நல்ல துவக்கம். ஆக்கப்பூர்வமாக அமைந்தது. 50 நாட்களுக்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் என்பது நேர்மறையான முயற்சி. இந்த நம்பிக்கையோடு அரசு அமைவதற்காக ஆதரவு அளித்தோம்.
1.ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும்.
2.குறைந்தபட்ச செயல் திட்டம்.
3.கூட்டணிக்கு பெயர் குறித்து ஆலோசித்தோம்.
இது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஜனநாயகப்பூர்வமான கூட்டணி. ஆலோசித்து அடுத்த கட்டத்தில் முடிவு எடுக்கப்படும். லோக்சபாவில் தவெகவிற்கு எம்பி கிடைத்த பிறகு இண்டி கூட்டணியில் தவெக இணைவது குறித்து பேசலாம். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.
இக்கூட்டம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:
தவெக கூட்டணி இயற்கையான கூட்டணி. இதையே அனைத்து கட்சிகளும் விரும்பின. தவெக கூட்டணி அமைந்துவிட்டது. இது கருத்து வேறுபாடு இல்லாத கூட்டணி.
லஞ்சமற்ற, சமூக நீதி கொண்ட ஆட்சி அமைப்பதில் உறுதியாக உள்ளதாக முதல்வர் கூறினார். ஒவ்வொரு கட்சியிலும்பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது
தவெக அரசுக்கான ஆதரவை உறுதியாக தெரிவித்தோம். ஊழலற்ற வெளிப்படையான மதசார்பற்ற அரசு செயல்படுகிறது. அதற்காக பாராட்டு தெரிவித்தோம். அனைவரையும் ஒருங்கிணைப்பது பற்றி பேசினோம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire