திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க இபிஎஸ் முயற்சி: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றச்சாட்டு
2 ஆடி 2026 வியாழன் 09:12 | பார்வைகள் : 1233
சட்டசபை தேர்தலுக்கு பிறகு, திமுக உடன்இணைந்து இபிஎஸ் ஆட்சி அமைக்க முயன்றதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் தான் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தோம் எனத்தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி மற்றும் எம்எல்ஏக்கள் அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்ட 9 பேர் இபிஎஸ்க்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:பொதுச்செயலாளர் ஆகிய நீங்கள், திமுக உடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்தீர்கள். நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள், தங்களது ஆதரவு நிலைப்பாட்டை எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகள், திமுக எதிர்ப்பில் வளர்ந்த தவெகவை ஆதரித்ததன் நோக்கம் இதுதான்.
ஆனால், தலைமை பொறுப்புகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் நிர்வாகிகளாக பணியாற்றியவர்களை பொறுப்புகளில் இருந்து நீக்கினீர்கள். இதனால், அவர்கள் மனச்சோர்வுடன் கட்சி பணியில் ஈடுபட்டனர்.
சி.வி.சண்முகத்திற்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் ஒதுக்கி வைத்தது ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை.
சமரச உடன்படிக்கையின்படி, மே 13 அன்று கட்சி பொறுப்புகளில் விடுவிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் அவரவர் எந்த பதவிகளில் வகித்து வந்தனரோ அவர்களுக்கு அவர்கள் வகித்த பொறுப்புகள் ஜூன் 4 அன்று வழங்கப்படும் என உறுதிஅளித்து இருந்தீர்கள். காலம் கடந்த நிலையில் ஜூன் 22 அன்று எஸ்பி வேலுமணி மற்றும் ஹரி ஆகியோர் தங்களை சந்தித்து பதவி நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என நினைவுபடுத்தினோம்.
ஆனால், தற்போது இபிஎஸ் அறிவித்தள்ள கட்சி பொறுப்பாளர்கள் பட்டியலை பார்க்கும் போது கட்சி வளர்ச்சி, நலனை கருத்தில் கொண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. தாங்கள் ஒப்புக் கொண்டு உறுதியளித்தபடி, பதவிகளில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அவரவர் வகித்த பதவிகளில் நியமிக்கப்படவில்லை.
இதற்கு முன்பு ஜெயலலிதா மற்றும் ஜானகி காலத்தில் கட்சி இரு பிரிவுகளாக பிளவு ஏற்படடு மீண்டும் இணைந்தபோது, கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் ஏற்கனவே அவர்கள் வகித்து வந்த பதவிகளில் ஜெயலலிதா நியமித்தார்.
ஓபிஎஸ் உடன் 12 எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகிச்சென்று மீண்டும் கட்சியில் இணைந்த போது, முன்பு அவர்கள் வகித்த பதவி மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சாரை சாரையாக
ஆனால், தற்போது மட்டும் இபிஎஸ் உறுதி அளித்தபடி, கட்சி பதவிகளில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அவர்கள் வகித்து வந்த பதவியை வழங்கவில்லை. கடந்த 50 நாட்களாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரை சாரை சாரையாக கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இபிஎஸ் எடுத்த தவறான முடிவால், 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல், 2026 சட்டசபை தேர்தலில்தொடர் தோலவி ஏற்பட்டுள்ளது. கட்சி கரைந்து கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல், தற்போது அறிவித்தகட்சி பொறுப்புகள் இதுபோல உள்ளது என கருதுகிறோம்.
இபிஎஸ் எங்களுக்கு ஏற்கனவே அளித்த உறுதிப்படி, கட்சியில் இணைந்த பிறகும், முந்தைய பதவிகளில் நியமிக்கப்படாமல் காலதாமதம் செய்வதோடு, உங்கள் விருப்பப்படி, பொறுப்புகளை நியமித்து வெளியிட்ட அறிவிப்பின்படி, நாங்கள் யாரும் தாங்கள் வழங்கிய கட்சி பதவிகளை ஏற்று கட்சிப் பணியில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளீர்கள்.
நீங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் என்றும் கட்சி உறுப்பினர்களாக செயல்படுகிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire