Paristamil Navigation Paristamil advert login

2027 ஜனாதிபதி தேர்தலின் அதிகாரப்பூர்வ திகதிகள் வெளியீடு!!

2027 ஜனாதிபதி தேர்தலின்  அதிகாரப்பூர்வ திகதிகள் வெளியீடு!!

1 ஆடி 2026 புதன் 22:09 | பார்வைகள் : 3302


2027 ஆம் ஆண்டு  ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று ஏப்ரல் 18-ஆம் திகதியும், இரண்டாம் சுற்று மே 2-ஆம் திகதியும் நடைபெறும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய அதிபரின் பதவிக்காலம் முடிவடையும் காலக்கெடுவை கருத்தில் கொண்டு இந்த திகதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

முதல் சுற்று தேர்தல் வசந்தகால பாடசாலை விடுமுறையுடன் ஒத்துப்போகிறது. இரண்டாம் சுற்று தேர்தல் தொழிலாளர் தினமான மே 1-க்கு அடுத்த நாளில் நடைபெறுவதால், சில கல்வி மண்டலங்களில் பாடசாலை திறந்திருக்கும் நிலையில், மற்ற சில மண்டலங்களில் பாடசாலை திறப்பதற்கு முந்தைய நாளிலேயே வாக்குப்பதிவு நடைபெறும்.

LR கட்சி ஜனாதிபதி வேட்பாளர்  Bruno Retailleau "மே 1 தொழிலாளர் தின பேரணிகள் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி, தேர்தலுக்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் மௌன விதியை பாதிக்கக்கூடும் என்றும், இது ஜனநாயக ரீதியாக சரியான முடிவு அல்ல" என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அரசாங்க பேச்சாளர் , தேர்தலுக்கு முந்தைய அரசியல் மௌன விதிகள் வழக்கம்போலவே அமுலில் இருக்கும் என்றும், காவல்துறை, அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களின் பொறுப்புணர்வில் அரசு முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3