Paristamil Navigation Paristamil advert login

உலகக் கோப்பை கால்பந்து: காங்கோவை வீழ்த்திய இங்கிலாந்து அபார வெற்றி - கேப்டன் ஹாரி கேன் அசத்தல்

உலகக் கோப்பை கால்பந்து: காங்கோவை வீழ்த்திய இங்கிலாந்து அபார வெற்றி - கேப்டன் ஹாரி கேன் அசத்தல்

2 ஆடி 2026 வியாழன் 15:29 | பார்வைகள் : 1186


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காங்கோ அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய நாக் அவுட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு அணிகள் மோதின.

போட்டியின் ஆரம்பத்தில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காங்கோ அணி வீரர் பிரையன் சிபென்கா ஆட்டத்தின் 7 வது நிமிடத்தில் அபாரமான கோல் ஒன்றை அடித்து தன்னுடைய அணியை முன்னிலைப்படுத்தினார்.

முதல் பாதியில் இங்கிலாந்து அணி தீவிரமாக முயற்சி செய்தும் காங்கோ அணி வீரர்களின் கட்டுக்கோப்பான ஆட்டத்தின் காரணமாக கோல் அடிக்க முடியவில்லை.

இரண்டாவது பாதியில் வேகமெடுத்த இங்கிலாந்து அணி தன்னுடைய தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கேப்டன் ஹாரி கேன் ஆட்டத்தின் 75 வது மற்றும் 86 வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல்களை அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம் நாக் அவுட் சுற்றில் காங்கோ அணியை  1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியதோடு,  காலிறுதிக்கு முந்தைய (Round of 16) சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது.

கேப்டன் ஹாரி கேன் அடித்த இந்த கோல்கள் மூலம் உலக கோப்பையில் அவர் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்து அணி அடுத்ததாக ஜூலை 5ம் திகதி மெக்சிகோ அணியை எதிர்கொள்ள உள்ளது.