Paristamil Navigation Paristamil advert login

வாட்சப்பில் வருகிறது username அம்சம் - இனி மொபைல் எண் இல்லாமலே பேசலாம்

வாட்சப்பில் வருகிறது username அம்சம் - இனி மொபைல் எண் இல்லாமலே பேசலாம்

2 ஆடி 2026 வியாழன் 16:35 | பார்வைகள் : 929


வாட்சப்பில் செல்போன் எண்ணை பகிராமல், Username மூலம் தொடர்பு கொள்ளும் அம்சத்தை வாட்சப் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்சப் செயலியை உலகம் முழுவதும் பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்சப் செயலியில் மற்றவர்களுடன் உரையாடுவதற்கு செல்போன் எண்ணை பகிர வேண்டிய கட்டாயம் உள்ளது.

செல்போன் எண்ணை பகிர்வதை பயனர்கள் பலரும் தனியுரிமை பாதிக்கப்படுவதாக உணர்ந்தனர். குழுக்களில் இணையும் போது, அவர்களின் எண் அனைவரும் பார்க்கும் வகையில் இருந்தது.

இதன் காரணமாக செல்போன் எண்ணை பகிராமல், Username மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் புதிய அம்சத்தை வாட்சப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், இன்ஸ்டாகிராமில் உள்ளது போல், வாட்ஸ்அப்பில் பயனர் பெயர் (Username) மூலம் தொடர்பு கொள்ள முடியும். ஆனால், இன்ஸ்டாகிராமில் உள்ளது போல் Search ல் சில எழுத்துகளை உள்ளீடு செய்ததும் Suggestion கட்டுவது போல் வாட்ஸ்அப்பில் இருக்காது.

வாட்ஸ்அப்பில் பயனர் பெயர் மூலம் ஒருவரை தொடர்பு கொள்ள அவர்களின் முழு பயனர் பெரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

இந்த வார இறுதிக்குள் Username பதிவு செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் வரும் எனவும், ஆண்டின் இறுதிக்குள் Username மூலம் தொடர்பு கொள்ளும் வசதி பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், WhatsApp — Settings > Account > Username என்ற இடத்தில் உங்களது Username பதிவு செய்து கொள்ளலாம்.