Paristamil Navigation Paristamil advert login

Lidlஇல் வாங்கிய குளிரூட்டிகள் பல மடங்கு விலையில் மறுவிற்பனைக்கு!!

Lidlஇல் வாங்கிய குளிரூட்டிகள்  பல மடங்கு விலையில் மறுவிற்பனைக்கு!!

3 ஆடி 2026 வெள்ளி 20:44 | பார்வைகள் : 3587


கடும் வெப்ப அலை மீண்டும் உருவாகும் நிலையில், Lidl விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட குளிரூட்டிகள் (climatiseurs) சாதனங்களை வாங்க மக்கள் பெருமளவில் திரண்டதால் பல இடங்களில் பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் விற்பனைக்கு வந்த “Tronic 3 in 1” எனப்படும் குளிரூட்டிகள்  179 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சில மணி நேரங்களுக்குள் அவை இணையத்தில் 700 யூரோக்கள் வரை அதிக விலைக்கு மறுவிற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Bayonne பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் தாம் வாங்கிய குளிரூட்டியை  460 யூரோக்களுக்கு இணையத்தில் விற்பனைக்கு வைத்துள்ளதாக கூறியுள்ளார். அதிக விலைக்கு மறுவிற்பனை செய்யலாம் என்பதை பின்னர் அறிந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும், தனது விளம்பரத்திற்கு நூற்றுக்கணக்கான தகவல்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, Rennes மற்றும் Toulouse பகுதிகளில் சிலர் அதே சாதனத்தை 590 முதல் 620 யூரோக்கள் வரை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

இதனிடையே, Lidl நிறுவனத்தின் பல கிளைகளில் நீண்ட வரிசைகள், தள்ளுமுள்ளுகள் மற்றும் வாய்த்தகராறுகள் ஏற்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன. சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள Lidl, தனது ஊழியர்கள் கடினமான சூழ்நிலையில் பதற்றத்தை சமாளிக்க வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், பொருட்கள் ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிட்டு முன்பதிவு செய்யப்படுவதால் இருப்பு குறைவாக இருந்ததாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3