ஐரோப்பாவில் வெப்ப அலை! 3,700-க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள்
4 ஆடி 2026 சனி 07:03 | பார்வைகள் : 1193
ஜூன் மாத இறுதியில் ஐரோப்பாவில் வீசிய கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 3,700 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
காலநிலை மாற்றமே இந்த அதீத வெப்பநிலைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரான்சில் மட்டும் 2,025 கூடுதல் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 22–28 காலகட்டத்தில் வீடுகளில் நிகழ்ந்த இறப்புகள் 91% அதிகரித்துள்ளன. பெல்ஜியத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,200 கூடுதல் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
நெதர்லாந்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு 480 க்கும் மேற்ப்பட்ட உயிரிழப்புக்கள்பதிவாகியுள்ளன.
இந்த வெப்ப அலையை நிபுணர்கள் மிகத் தீவிரமான ஒன்றாக விவரித்துள்ள நிலையில், முழுமையான தரவுகள் கிடைக்கும்போது உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire