Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் நாட்டின் சிறந்த அதிபர் நான்தான் - புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பிய டிரம்ப்

இஸ்ரேல் நாட்டின் சிறந்த அதிபர் நான்தான் - புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பிய டிரம்ப்

4 ஆடி 2026 சனி 11:11 | பார்வைகள் : 1272


இஸ்ரேல் நாட்டின் வரலாற்றிலேயே தான் தான் மிகச் சிறந்த அமெரிக்க அதிபர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய டிரம்ப், “ஒரு யூதர் எப்படி டெமாக்ரடிக் கட்சிக்கு வாக்களிக்க முடியும் என்பதே எனக்குப் புரியவில்லை.

இஸ்ரேல் வரலாற்றில் நான்தான் சிறந்த அதிபராக இருந்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மக்கள் மத்தியில் தனக்கு 99 சதவீத ஆதரவு இருப்பதாகத் டிரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாக நடந்து வரும் போர் மற்றும் அணு ஆயுதப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் டிரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

ஈரானை ராணுவ ரீதியாக அமெரிக்கா முற்றிலும் தோற்கடித்துவிட்டதாகக் குறிப்பிட்ட டிரம்ப், அந்த நாடு அணு ஆயுதம் தயாரிப்பதை தனது நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

தற்போதைய சூழலில் ஈரானுடன் கத்தாரில் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையேயான உறவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த மாதம் கையெழுத்தான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் சேர்க்கப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என அந்நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மக்கள் மத்தியில் டிரம்பிற்கான ஆதரவு 44 சதவீதமாகக் குறைந்துள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

மறுபுறம், அமெரிக்காவில் உள்ள யூதர்களில் பெரும்பான்மையினர் பாரம்பரியமாக டெமாக்ரடிக் கட்சிக்கே வாக்களித்து வருகின்றனர். 2016, 2020 மற்றும் 2024 ஆகிய அதிபர் தேர்தல்களின் புள்ளிவிவரங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன.

இந்தச் சூழலில், அமெரிக்க யூதர்களின் வாக்கு வங்கியைத் தன் பக்கம் ஈர்க்கும் நோக்கிலும், மத்திய கிழக்கில் தனது வெளியுறவுக் கொள்கையை நியாயப்படுத்தும் வகையிலும் டிரம்ப் இத்தகைய அதிரடி கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வருவதாக கூறப்படுகின்றது.

 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3