இந்த அணி வென்றால் நிலவுக்கு செல்ல உள்ள கால்பந்து - நாசா அறிவிப்பு
4 ஆடி 2026 சனி 13:00 | பார்வைகள் : 1014
அமெரிக்க அணி பிபா உலக கால்பந்து கிண்ணத்தை வென்றால், நிலவுக்கு கால்பந்தை அனுப்புவதாக நாசா அறிவித்துள்ளது.
2026 பிபா உலக கால்பந்து கிண்ணத்தை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தி வருகின்றன.
இதுவரை அமெரிக்க ஆண்கள் அணி பிபா உலக கால்பந்து கிண்ணத்தை வென்றது இல்லை.
ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், போஸ்னியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அமெரிக்கா ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா பிபா உலக கால்பந்து கிண்ணத்தை வென்றால், கால்பந்து நிலவுக்கு அனுப்பப்படும் என நாசா தெரிவித்துள்ளது.
எதிர்கால நிலவுத் தளம் குறித்த நாசாவின் திட்டங்களை விவரித்த நாசாவின் தலைமை நிர்வாக அதிகாரி Jared Isaacman இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்திலும் இது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "அமெரிக்கா ஆண்கள் அணி உலகக் கிண்ணத்தை வெல்வது சாத்தியமற்றது என மக்கள் சொல்கிறார்கள். நிலவில் மனிதர்களை இறக்குவது சாத்தியமற்றது என்று மக்கள் கூறினார்கள்.
அமெரிக்கர்கள் அதை 6 முறை செய்தார்கள். அதன் பிறகு யாரும் அதைச் செய்யவில்லை. மேலும், நாங்கள் அதை மீண்டும் செய்கிறோம். கிட்டத்தட்ட சாத்தியமற்றதைச் சாதிப்பதில் அமெரிக்காவிற்கு ஒரு வளமான வரலாறு உண்டு.
எனவே, நீங்கள் தடைகளைத் தகர்க்கும்போது, பிபா உலக கால்பந்துமற்றும் அமெரிக்கா வீரர்களின் கையொப்பங்கள் உள்ள ஜெர்சிகளில் ஒன்றை நிலவுக்கு அனுப்புவோம்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அப்பல்லோ 14 விண்வெளிப் பயணத்திற்கு 2 கோல்ஃப் பந்துகளையும், தற்காலிகமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு மட்டையையும் இரகசியமாகக் கொண்டு சென்றது.
1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் திகதி, அந்த நாசா விண்வெளி வீரர் நிலவில் அந்தப் பந்துகளை அடித்து, மற்றொரு உலகில் ஒரு விளையாட்டை விளையாடிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire