Sony PlayStation வெளியிட்டுள்ள அறிவிப்பு- புதிய விளையாட்டுகள் Disc வடிவில் கிடைக்காது
4 ஆடி 2026 சனி 15:07 | பார்வைகள் : 829
Sony Interactive Entertainment நிறுவனம் அறிவித்துள்ள முக்கிய மாற்றம் உலகம் முழுவதும் கேமிங் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2028 ஜனவரி மாதம் முதல் PlayStation கன்சோல்களில் வெளியாகும் புதிய விளையாட்டுகள் Physical Disc (டிஸ்க்) வடிவில் கிடைக்காது.
அதற்கு பதிலாக, அனைத்து புதிய கேம்களும் PlayStation Store மற்றும் விற்பனையகங்களில் Digital Format-ஆக மட்டுமே வழங்கப்படும்.
இந்த மாற்றம், 2028-க்கு முன் வெளியான அல்லது வெளியிடப்பட உள்ள டிஸ்க் வடிவிலான கேம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
Sony நிறுவனம், கேமிங் உலகில் பெரும்பாலான பயனர்கள் தற்போது டிஜிட்டல் வடிவில் விளையாட்டுகளை வாங்கி விளையாட விரும்புகிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.
“இது இயல்பான மாற்றம். கேமர்களின் விருப்பத்திற்கேற்ப, டிஜிட்டல் வடிவில் கேம்களை எளிதாக அணுகும் வசதியை அதிகரிக்கிறோம். எங்கள் ரசிகர்களுக்கு உலகத் தரமான கேமிங் அனுபவத்தை தொடர்ந்து வழங்குவோம்” என்று Sony அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Physical Disc-களை சேகரிக்கும் பழக்கம் குறைந்துவரும் நிலையில், Digital Gaming தான் எதிர்காலம் என்பதை Sony மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இருப்பினும், disc வடிவிலான கேம்களுக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire