முதலமைச்சர் விஜயை சந்தித்த இயக்குநர் ஏ.எல். விஜய்!
4 ஆடி 2026 சனி 16:25 | பார்வைகள் : 1072
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜயை, இயக்குநர் ஏ.எல். விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற விஜயை திரையுலகைச் சேர்ந்த பலரும் தொடர்ந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்த சந்திப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, 2013-ஆம் ஆண்டு வெளியான ‘தலைவா’ திரைப்படத்தின் புகழ்பெற்ற “TIME TO LEAD” வாசகத்துடன் விஜய்யின் கம்பீரமான உருவம் இடம்பெற்ற சிறப்பு புகைப்படத்தை ஏ.எல். விஜய் முதலமைச்சர் விஜய்க்கு நினைவுப் பரிசாக வழங்கினார். இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
‘தலைவா’ திரைப்படம் வெளியான காலத்தில் “TIME TO LEAD” என்ற வாசகம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு, படத்தின் வெளியீட்டிலும் பல சிக்கல்களை சந்திக்க நேரிட்டது. ஆனால், அப்போது சினிமாவுக்காக பயன்படுத்தப்பட்ட அந்த வாசகம், இன்று விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிலையில் நிஜமாகியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த சந்திப்பு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire