அதிரடி ஆட்டத்தில் தெறிக்கவிட்ட பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் மிரட்டல் வெற்றி
5 ஆடி 2026 ஞாயிறு 15:16 | பார்வைகள் : 1042
மேஜர் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகளுக்கு இடையிலான போட்டி போமோனாவில் நடந்தது.
முதலில் ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது.
மேத்யூ ட்ரோப் (Matthew Tromp) 44 ஓட்டங்களும், ஜேசன் ஹோல்டர் (Jason Holder) 43 (22) ஓட்டங்களும் எடுத்தனர். கார்பின் போஷ், உகர்கர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியில், கேப்டன் கிரேன் பொல்லார்ட் (Kieron Pollard) 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளும் 63 ஓட்டங்கள் விளாசினார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கோரி ஆண்டர்சன் (Corey Anderson) 24 பந்துகளில் 37 ஓட்டங்களும் விளாச, மும்பை இந்தியன்ஸ் 19.5 ஓவர்களில் 168 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire