ஜனாதிபதி மக்ரோன் விரைவில் சிரியாவுக்கு பயணம்!!
5 ஆடி 2026 ஞாயிறு 20:57 | பார்வைகள் : 1961
சிரிய ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவிப்பின்படி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் விரைவில் சிரியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2024 இறுதியில் புதிய ஜனாதிபதி Ahmad al-Chareh பதவியேற்ற பிறகு, சிரியாவிற்கு செல்லும் முதல் மேற்கத்திய அரசுத் தலைவராக மக்ரோன் இருப்பார்.
2008–2009 ஆம் ஆண்டுகளில் நிக்கோலா சர்கோஸி மேற்கொண்ட பயணங்களுக்குப் பிறகு, சிரியாவிற்கு செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனாக இருப்பார். 2011 ஆம் ஆண்டு " printemps arabe " போராட்டங்களுக்குப் பின்னர், இரு நாடுகளின் உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
மக்ரோனுடன் பிரான்ஸ் முதலீட்டாளர்கள் மற்றும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பயணம் செய்வார்கள். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் பிரான்ஸ்–சிரியா பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதும் ஆகும்.
இந்த அறிவிப்பு வெளியாகும் நிலையில், கடந்த வாரம் Damasஸில் உள்ள ஒரு கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம், புதிய சிரிய அரசாங்கம் எதிர்கொண்டு வரும் பாதுகாப்பு சவால்களை எடுத்துக்காட்டுகிறது.
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire