பரபரப்பு - நகர முதல்வர் தனது ஊதியத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்!
6 ஆடி 2026 திங்கள் 19:33 | பார்வைகள் : 1894
Foix (Ariège) நகரின் புதிய நகர முதல்வர் ஜெரோம் மாதேயோஸ் (Jérôme Matéos),தனது ஊதியத்தை 40% உயர்த்தியதற்கான எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு பதிலாக
ஜூலை 1 அன்று தனது ஊதிய பத்திரத்தை(bulletin de paie), நகராட்சியின் Facebook கணக்கில் வெளியிட்டுள்ளார்.
“நான் அதிக வெளிப்படைத்தன்மையை வாக்குறுதி அளித்திருந்தேன், அதற்கான தொடக்கம் என்னிடமிருந்தே.”
ஊதிய உயர்வு — ஏன் விமர்சனம்?
ஜெரோம் மாதேயோஸ், மார்ச் 2026ல் Foix நகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
பதவியேற்றவுடன் தனது ஊதியத்தை 40% உயர்த்தினார். இதை எதிர்க்கட்சி கடுமையாக விமர்சித்தது
ஜூன் 27‑ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை சபை கூட்டத்தில், எதிர்க்கட்சி, இந்த ஊதிய உயர்வுக்கான கூடுதல் விளக்கங்களை கேட்டது.
மாதேயோஸ் இதற்கு முன்,
“நகர முதல்வராகப் பதவியேற்றதால், தனது முந்தைய அரசுப் பணியாளர் ஊதியம் குறைந்துவிட்டது”
நகர முதல்வர் பதவிக்கு அதிக நேர முதலீடு தேவைப்படுவதால் இந்த உயர்வு நியாயமானது" என விளக்கினார்
ஜெரோம் மாதேயோஸ் முன்பு,
பிரான்ஸ் அரசின் இணை நிர்வாககியாக (attaché d’administration), அரசாங்கத்தின் பொதுச் செயலகத்தில் பணியாற்றினார்
அவர் வெளியிட்ட முந்தைய பத்திரத்தில்
நிகர வருமானம் : 3,906.39 €
நகர முதல்வராக அவர் பெறும் ஊதியம்:
3,629.39 €
அதாவது மாதத்திற்கு 277 € குறைவு,
இதனால், அவர் கூறிய “ஊதியம் குறைந்ததால் உயர்த்த வேண்டிய அவசியம்”
என்பது பகுதியளவில் உண்மை என தெரிகிறது.
நகராட்சி வெளியிட்ட அறிவிப்பில்
“முந்தைய ஊதியம் மற்றும் தற்போதைய நகர முதல்வர் ஊதியத்திற்கிடையேயான வித்தியாசம்
இந்த உயர்வை நியாயப்படுத்துகிறது.”
இந்த உயர்வு ஏப்ரல் 25, 2026ல் ஆலோசனை சபையில் அங்கீகரிக்கப்பட்டது.
Foix நகரம் 10,000 மக்கள் தொகை எல்லையை கடந்ததால், இந்த உயர்வு சட்டப்படி சாத்தியமானது எனத் தெரிவித்திருந்தது.
ஆனால்… மொத்த வருமானம் அதிகரித்துள்ளது
ஜெரோம் மாதேயோஸ்,
நகர முதல்வர் ஊதியம் : 3,629.39 €
நகரப் பெருநகர அமைப்பின் துணைத் தலைவர் (vice‑président) ஊதியம் : 1,000 €
மொத்தம் : சுமார் 4,600 € நிகர வருமானம் / மாதம்
இது, அவரது முந்தைய அரசுப் பணியாளர் வருமானத்தை விட அதிகம்
ஆனால் அவர்,
“நான் என் வாழ்க்கைச் செலவுகளை குறைத்துள்ளேன்.” என நியாயப்படுத்தினார்.
எதிர்க்கட்சியின் நிலை — இன்னும் நம்பிக்கை இல்லை
எதிர்க்கட்சி,
இந்த பணத்தை மற்ற முதலீடுகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம். ஊதிய உயர்வு அவசியமற்றது.
ஊதிய பத்திரத்தை வெளியிட்டாலும், அவர்களின் சந்தேகம் நீங்கவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire