Paristamil Navigation Paristamil advert login

சமூக வீட்டு நெருக்கடி உச்சம்: Île-de-Franceஇல் மட்டும் 2 மில்லியன் பேர் வரை காத்திருப்பு!!

சமூக வீட்டு நெருக்கடி உச்சம்: Île-de-Franceஇல் மட்டும் 2 மில்லியன் பேர் வரை காத்திருப்பு!!

7 ஆடி 2026 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 3226


Île-de-France பகுதிகளில் சமூக வீடுகளுக்காக(HLM) காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை முதல் முறையாக 2 மில்லியன் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நிலவரப்படி, சமூக வீடுகளுக்காக 9 இலட்சத்து 33 ஆயிரத்து 996 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 2,058,483 பேர் வீடுகளுக்காக காத்திருக்கின்றனர். 

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வீடுகளுக்காக காத்திருக்கும் குடும்பங்களில் ஐந்தில் ஒரு பகுதி ஒற்றை பெற்றோர் குடும்பங்களாகும். மேலும், கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதி குடும்பங்களின் ஆண்டு வருமானம் ஒருவருக்கு 12 ஆயிரத்து 83 யூரோக்களுக்கு குறைவாக உள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 

இதேவேளை, விண்ணப்பித்துள்ள குடும்பங்களில் 21 சதவீதத்தினர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்காக காத்திருக்கின்றனர். ஏற்கனவே சமூக குடியிருப்புகளில் வசிக்கும் 30 சதவீத குடும்பங்கள் கூட புதிய வீடுகளுக்கு மாற்றம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

Paris நகரில் மட்டும் 2025ஆம் ஆண்டில் 327,258 சமூக வீட்டு விண்ணப்பங்கள் புதுப்பிக்கப்பட்டோ அல்லது புதிதாக சமர்ப்பிக்கப்பட்டோ உள்ளன. இது 2024ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 12 சதவீத அதிகரிப்பாகும். 

அதேநேரம், 2025ஆம் ஆண்டில் முழு Île-de-France பிராந்தியத்தில் 67,113 சமூக வீடுகள் ஒதுக்கப்பட்டு, 159,786 பேர் குடியமர்த்தப்பட்டுள்ளனர். எனினும், ஒரு சமூக வீட்டைப் பெற சராசரியாக 30.4 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் இந்த காலம் 35 மாதங்களைக் கூட கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3