உலகக் கோப்பை கால்பந்து! போர்த்துகலை வீழ்த்தி காலிறுதிக்கு நுழைந்த ஸ்பெயின்
7 ஆடி 2026 செவ்வாய் 07:17 | பார்வைகள் : 740
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்த்துகல் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதல் கடைசி நிமிடம் வரை இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதின.
பந்தை ஸ்பெயின் அணி பெரும்பாலான நேரங்களில்(55.2 % ஆதிக்கத்துடன்) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாலும், போர்த்துகல் அணியின் தற்காப்பு கோல் அடிப்பதற்கு சிம்ம சொப்பனமாக மாற்றியது.
ஆட்டத்தில் முடிவு எட்டப்படும் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் அதாவது இரண்டாவது பாதியின் கூடுதல் நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் மிக்கல் மெரினோ சிறப்பான கோல் ஒன்றை அடித்தார்.
இதன் மூலம் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் போர்த்துகல் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
2010ம் ஆண்டு கோப்பை வென்ற பிறகு ஸ்பெயின் அணி முதல் முறையாக காலிறுதிச் சுற்றுக்கு தகுதி நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire