போட்டியை நடத்தும் அமெரிக்காவை வெளியேற்றிய பெல்ஜியம்
7 ஆடி 2026 செவ்வாய் 10:20 | பார்வைகள் : 1062
FIFA உலகக்கிண்ணப் போட்டியில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.
பெல்ஜியம் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி சியாட்டிலில் நடந்தது.
ஆட்டத்தின் 9வது நிமிடத்திலேயே பெல்ஜியம் வீரர் சார்லஸ் டி கெட்டலேரே கோல் அடித்தார்.
அதற்கு பதிலடியாக, 31வது நிமிடத்தில் அமெரிக்கா அணியின் மாலிக் தில்மேன் (Malik Tillman) கோல் அடித்தார்.
அடுத்து 2 நிமிடங்களில் கெட்டலேரே (Ketelaere) இரண்டாவது கோல் அடித்து மிரட்டினார். பின்னர் ஹன்ஸ் வனகென் 57வது நிமிடத்திலும், ரோமெலு லூகாகு 90+3வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர்.
இதன்மூலம் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
தோல்வியால் போட்டியை நடத்தும் அமெரிக்க அணி வெளியேறியது. ஏற்கனவே போட்டியை நடத்தும் கனடா, மெக்ஸிகோ அணிகள் வெளியேறியிருந்தன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire