டி.ஆர்.பாலு வழக்கில் எந்த சமரசமும் கிடையாது: அண்ணாமலை திட்டவட்டம்
7 ஆடி 2026 செவ்வாய் 10:38 | பார்வைகள் : 925
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வழக்கில் எந்த சமரசமும் கிடையாது. தவெக அரசுக்கு ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்'' என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியின் வீ தி லீடர்ஸ் அமைப்பின் அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:
திமுக பொருளாளர் டிஆர்பாலு நீதிமன்றத்திற்கு வந்தார், நீதிபதியையும், என்னையும் பார்த்தார், பிறகு அவர் இதுவரைக்கும் எட்டு பேர் மீது அவதூறு வழக்கு போட்டிருக்கிறேன். ஆறு பேரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கி இருக்கிறேன். ஒரு தனியார் பத்திரிகையிடம் ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வாங்கி இருக்கிறேன் என்றார். இது எட்டாவது கேஸ், இதுவரைக்கும் நான் போட்ட எந்த அவதூறு வழக்கிலும் தோற்றதில்லை'' என்றார். எனக்கு 82 வயது ஆகிறது, நான் 50 வருடமாக ஒரு அரசியல் கட்சியில் இருக்கிறேன். அந்த அரசியல் கட்சியின் பொருளாளராக 35, 40 வருடமாக இருக்கிறேன் என்று பேசினார்.
பிறகு படிப்படியாக குறுக்கு விசாரணை வரை சென்று விட்டது. பிறகு அந்த நபரே கோர்ட்டுக்கு வந்து இந்த வழக்கை நாங்கள் வாபஸ் வாங்குகிறோம் என்று சொல்கிறார். அவர் வாபஸ் வாங்கியதால் அண்ணாமலை சமரசம் செய்து விட்டாரா என்கின்றனர். அப்போதுதான் நான் பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு அறிவை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். யாரோ ஒருவர் என் மீது வழக்கு பதிவு செய்கிறார். வழக்கை பதிவு செய்தவர், அதை வாபஸ் வாங்கினால், வழக்கை பதிவு செய்தவருக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்.
வழக்கை பதிவு செய்தவர் எப்பொழுது வேண்டுமானாலும் வாபஸ் பெறலாம், அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இந்த வழக்கு நடக்க, நடக்க கோர்ட்டில் அவர் எதையோ சொல்கிறார். நான் கோர்ட்டில் அங்கேயே சொல்கிறேன். என் மீது அவதூறு பரப்புகிறார் என்றேன், அங்கேயே மறுபடியும் அவதூறு வழக்கு பதிவு செய்வேன் என்றேன். கோர்ட்டுக்குள் பேசுவது பொதுவெளியில் பேசுவது கிடையாது, என்றார். நான் 50 பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், எனது மனது கஷ்டமாக இருக்கிறது என்று வாதிட்டேன். என் மீது அவதூறு பரப்புகிறார் என்று சண்டை போட்டேன். அந்த வழக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
எதிர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையில் பேசுவது குறித்து வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருப்பதாக கூறினார். நான் பதிவு செய்த வழக்கும் நண்பர் ஆகாமல் இருக்கிறது. தற்போது எந்த வழக்கை டிஆர்பாலு வாபஸ் பெற்றுள்ளார். இந்த வழக்கில் சமரசமும் செய்து கொள்ளவில்லை. இதுவரைக்கும் நான் யாரை என்ன பேசினேனோ, அது உண்மை. தொடர்ந்து பேசுவேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனை சந்தித்துக் கொள்ளலாம். எதற்காக இதை சொல்கிறேன் என்றால், கரப்ஷனை எப்பொழுதும் தனிப்பட்ட முறையில் எதிர்க்கிறேன்.
தமிழகத்தில் கரப்ஷன் கட்டுக்குள் வருகிறது என்றால் ஒரு நாகரிக குடிமகனாக ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. எந்த ஒரு அரசு வந்தாலும் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்களே ஒரு புதிய கம்பெனிக்கு சென்றால், ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் நன்றாக வேலை செய்வதற்கு காலம் அவகாசம் தேவைப்படும். இன்னைக்கு என்னுடைய சிந்தனை என்னவென்றால் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். நாம் சப்போர்ட் செய்வோம். நன்றாக வேலை பார்க்கட்டும். தடைகளை போட வேண்டாம். எந்த விஷயத்தை சொன்னாலும் கூட அறிவுறுத்துகிறோம், சொல்கின்றோம். இதை பாருங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உங்கள் ஆட்களிடம் பேசுங்கள் என்று தான் நாம் சொல்கிறோம்.
இன்றைக்கு தமிழ்நாடு புரையோடிப் போய்விட்டது. இங்கிலாந்து அரசியல் மாறி இவ்வளவு இடைவெளி இருக்கிறது. வரவுக்கும் செலவுக்கும் சம்பந்தமே இல்லை. மாற்றுவது அவ்வளவு எளிது கிடையாது. ஒரு வருடம் கால அவகாசம் தேவை. புதிய அரசில் அமைச்சர்களாக உள்ள பாதி பேர், அவர்கள் இதுவரைக்கும் கவுன்சிலராக கூட இருந்தது கிடையாது. இன்றைக்கு அமைச்சர்களாக இருக்கிறார்கள் பாவம். அவர்களுக்கு அவகாசம் கொடுக்காமல் எவ்வாறு வேலை செய்வார்கள். அவர்களுக்கு லெப்ட் என்ன, ரைட் என்ன, இன்கமிங் என்ன, அவுட்கோயிங் என்ன, என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவே ஆறு மாதம் ஆகும். இதனால் இன்றைக்கு நாம் எல்லோரும் அந்த நேரம் கொடுக்க வேண்டும்.
தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால், முதல் ஆளாக நாம் எப்பொழுதுமே வரவேற்க போகிறோம். கரப்ஷனை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களை வரவேற்க போகிறோம். தினமும் செய்தியாளர்களை பார்த்து என்ன செய்யப் போகிறார்கள். இன்னைக்கு செய்தியாளர்களை பார்த்து உங்கள் வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்களா என்று கேட்கலாம்.
செய்தியாளர் உங்களைப் பார்த்து உங்க வீட்டில் நல்லா இருக்கிறார்களா என்று கேட்கலாம். இந்த இரண்டைத் தவிர நீங்கள் என்ன கேட்க முடியும். நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அரசுக்கு நேரம் கொடுக்க வேண்டும். நிறைய தலைவர்களை உருவாக்குவோம். நம்பிக்கையுடன் வந்திருக்கும் எல்லா பெரியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire