Nothing Phone 4b இந்தியாவில் ஜூலை 7 அறிமுகம் - RCB Edition சிறப்பு வெளியீடு
7 ஆடி 2026 செவ்வாய் 13:05 | பார்வைகள் : 882
Nothing நிறுவனம் அதன் புதிய B Series ஸ்மார்ட்போன் Nothing Phone 4b-ஐ இந்தியாவில் ஜூலை 7, 2026 அன்று மதியம் 3:30 மணிக்கு அறிமுகப்படுத்துகிறது.
இந்த மாடல், Nothing-ன் தனித்துவமான வடிவமைப்பை குறைந்த விலையில் விரும்பும் பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த போன், Snapdragon 6 Gen 4 சிப், 6.7 அங்குல AMOLED திரை (120Hz refresh rate), 8GB RAM, Android 16 அடிப்படையிலான Nothing OS 4.1 ஆகிய அம்சங்களுடன் வரவுள்ளது.
கேமரா அமைப்பில் 50MP primary camera (OIS), 8MP secondary camera மற்றும் 16MP front camera இடம்பெறும். பேட்டரி திறன் 5,400mAh முதல் 6,000mAh வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Nothing Phone 4b இரண்டு வேரியண்ட்களில் (8GB+128GB மற்றும் 8GB+256GB) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை சுமார் ரூ.30,000-க்குள் இருக்கும் என தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
சிறப்பு RCB Edition (Royal Challengers Bengaluru) சிவப்பு நிறத்தில், RCB லோகோவுடன், ஜூலை 7 அன்று மாலை 4 மணிக்கு பெங்களூரு Indiranagar-இல் உள்ள Nothing Store-இல் மட்டும் கிடைக்கும். இது first-come, first-served அடிப்படையில் விற்பனை செய்யப்படும். ஓன்லைன் விற்பனை குறித்து நிறுவனம் இதுவரை உறுதி செய்யவில்லை.
பொதுவான நீல நிற மாடல் Flipkart-இல் விரைவில் கிடைக்கும். வங்கி தள்ளுபடி, எக்சேஞ்ச் ஆஃபர், EMI வாய்ப்புகள் போன்றவை அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு அறிவிக்கப்படும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire