Paristamil Navigation Paristamil advert login

38 வயதில் வேகப்பந்து வீச்சாளர் பரிதாப மரணம்

38 வயதில் வேகப்பந்து வீச்சாளர் பரிதாப மரணம்

7 ஆடி 2026 செவ்வாய் 13:32 | பார்வைகள் : 879


ஆப்கானிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஜத்ரான் 38 வயதில் உயிரிழந்தார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 2009 முதல் 2020 வரை விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஜத்ரான் (Shapoor Zadran).

இவர் நீண்டகாலமாக Hemophagocytic Lympho Histiocytosis என்ற கடுமையான நோயெதிர்ப்பு மண்டலக் கோளாறுடன் போராடி வந்தார்.

ஷபூர் ஜத்ரான் கடந்த சில மாதங்களாக டெல்லி-NCR பகுதியில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 38 வயதாகும் ஷபூர் ஜத்ரான் காலமானதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆப்கான் வாரியம் சமூக ஊடக பக்கத்தில், "ஷபூர் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிற்கு கௌரவம், தைரியம் மற்றும் பெருமையுடன் பணியாற்றினார்.

அவரது பங்களிப்புகளும், சாதனைகளும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் வரலாற்றில் எப்போதும் ஒரு முக்கிய அங்கமாக நிலைத்திருக்கும். மேலும், தேசிய அணிக்காக அவர் ஆற்றிய முயற்சிகள் ஒருபோதும் மறக்கப்படாது" என அஞ்சலி செலுத்தியுள்ளது.

ஷபூர் ஜத்ரான் 43 ஒருநாள் போட்டிகளில் 43 விக்கெட்டுகளும், 32 டி20 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.