புதிய Green Dot Indicator அம்சத்தை சோதனை செய்து வரும் WhatsApp
8 ஆடி 2026 புதன் 11:41 | பார்வைகள் : 787
WhatsApp நிறுவனம், iPhone பயனர்களுக்காக புதிய “Green Dot Indicator” அம்சத்தை சோதனை செய்து வருகிறது.
இந்த அம்சம், ஒரு தொடர்பு WhatsApp-இல் ஓன்லைனில் இருக்கும்போது, அவர்களின் ப்ரொஃபைல் புகைப்படத்தில் சிறிய பச்சை வட்டம் தோன்றும்.
முன்பு “Online” எனும் எழுத்து மட்டும் காட்டப்பட்ட நிலையில், இப்போது பச்சை வட்டம் மூலம் ஒருவரின் செயல்பாட்டை உடனடியாக அறியலாம். அவர்கள் ஆப்பை விட்டு வெளியேறியவுடன் அந்த பச்சை வட்டம் மறைந்து விடும்.
இந்த அம்சம் தற்போது iOS TestFlight Beta (26.26.10.72)-இல் சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. WhatsApp, கடந்த மாதம் Android Beta-வில் இதை அறிமுகப்படுத்தியிருந்தது. இப்போது iPhone-க்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக, Privacy Settings-இல் எந்த மாற்றமும் இல்லை. ஒருவர் “Last Seen & Online” காட்சியை மறைத்திருந்தால், அவர்களின் பச்சை வட்டமும் மற்றவர்களுக்கு தெரியாது.
தற்போது இந்த Green Dot, Chat Info Screen-இல் மட்டுமே காணப்படுகிறது. Chats பட்டியல், Call History அல்லது Contact List-இல் இது இன்னும் சேர்க்கப்படவில்லை. WhatsApp, படிப்படியாக விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் உள்ளது.
இந்த சிறிய மாற்றம், பயனர்களுக்கு ஒருவரின் availability-ஐ விரைவாக அறிய உதவும். இதனால், செய்தி அனுப்பும் நேரம், அழைப்பை தொடங்கும் முடிவு ஆகியவை எளிதாகும்.
Instagram, Messenger போன்ற Meta-வின் பிற ஆப்ஸ்களில் ஏற்கனவே பச்சை வட்டம் பயன்படுத்தப்படுவதால், WhatsApp-இன் வடிவமைப்பும் அதேபோல் ஒருங்கிணைக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire