அமெரிக்காவில் 10 நகரங்களில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பு தொடக்கம்
9 ஆடி 2026 வியாழன் 07:54 | பார்வைகள் : 1326
அமெரிக்காவில் 10 நகரங்களில், அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, 'வீ தி லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். இதுவரை 19 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்நிலையில், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை, நியூ ஜெர்சி தமிழ் பேரவை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்க, அண்ணாமலை அமெரிக்கா சென்றார்.
அதற்கு முன்னதாக, நியூ ஜெர்சி நகரில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டது. அதை விரிவுபடுத்தும் விதமாக, சிகாகோ, மிச்சிகன், பாஸ்டன், வர்ஜீனியா, அட்லாண்டா, பே ஏரியா, சான் அன்டோனியோ, டல்லாஸ், அரிசோனா ஆகிய நகரங்களிலும், அண்ணாமலையின் அமைப்பு தொடங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
அங்குள்ள ஆதரவாளர்களை சந்தித்து, அண்ணாமலை பேசி வருகிறார். அமெரிக்க நகரங்களின் ஒருங்கிணைப்பாளராக, அரவிந்த் ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையே, 'பொள்ளாச்சியில் வரும் ஜூலை 12ம் தேதி, அண்ணாமலை பொதுக்கூட்டம் நடத்த உள்ளார்.
அதற்கு முன்பாக, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பில், 20 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க, அண்ணாமலை தீவிரம் காட்டி வருகிறார். அதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடந்து வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire