Paristamil Navigation Paristamil advert login

சட்டசபை தேர்தலை புறக்கணிக்க நினைத்தேன்; வைகோ

சட்டசபை தேர்தலை புறக்கணிக்க நினைத்தேன்; வைகோ

9 ஆடி 2026 வியாழன் 08:58 | பார்வைகள் : 849


நிதி நெருக்கடியில் சிக்கி தமிழக அரசு தவிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இது குறித்து வைகோ கூறியதாவது: தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல், அதை எப்படி செயல்படுத்துவது என்ற ஆலோசனையில் முதல்வர் விஜய் ஈடுபட்டுள்ளார். நிதி நெருக்கடியை எப்படி சமாளிப்பது என அரசு திணறிக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசு, வஞ்சகம் இல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்தால், கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை தமிழக அரசால் நிறைவேற்ற முடியும்.

கரூருக்கு விஜய் செல்லக்கூடாது என்பதற்காக, உச்ச நீதிமன்றத்துக்கு தி.மு.க., சென்றது, ஆனால், நீதிமன்றம் சவுக்கால் சாட்டையடி அடித்துள்ளது. செந்தில் பாலாஜி, மலை முழங்கி மகாதேவன்.

தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, பேசுவது தர்மம் கிடையாது என்பதால், நான், அப்போது விமர்சிக்கவில்லை. சட்டசபை தேர்தலை புறக்கணிக்க நினைத்தேன். தேர்தலில் போட்டியிடா விட்டால் கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் என்பதால் போட்டியிட்டோம்.

இவ்வாறு வைகோ கூறினார்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்