பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது! - முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
10 ஆடி 2026 வெள்ளி 06:37 | பார்வைகள் : 867
முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயரில் இருக்கும் விடியலை நீக்கி, தவெக அரசு 'மாற்றம்' செய்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கம் தென்னரசு பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
‘மகளிர் விடியல் பயணம்’அரசு சாதாரண கட்டண நகரப் பஸ்களில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரச் சுமையின்றி பயணம் செய்யும் வகையில் இலவசப் பயணத் திட்டம் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான இத்திட்டத்திற்கு ‘மகளிர் விடியல் பயணம்’ என்று பெயரிடப்பட்டு, பஸ்களின் முகப்பு மற்றும் பின்புறக் கண்ணாடிகளில் டிஸ்பிளே போர்டுகளில் அவ்வாறே காட்சிப்படுத்தப்பட்டது.
தவெக அரசுபணிக்குச் செல்லும் பெண்கள், சிறு தொழில் புரியும் மகளிர் மற்றும் கல்லூரி மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டம், புதிய அரசின் கீழும் எவ்வித தடையுமின்றித் தொடர்கிறது. தற்போது தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களை அதிரடியாக மாற்றம் செய்து வருகிறது.மகளிர் பயணம்அந்த வரிசையில் ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற திட்டத்தின் பெயரில் ‘விடியல்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, சுருக்கமாக ‘மகளிர் பயணம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து மண்டலப் பேருந்துகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயரில் இருக்கும் விடியலை நீக்கி, 'மாற்றம்' செய்யப்பட்டதையடுத்து முன்னாள் திமுக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
வெற்றியை பெயர் தீர்மானிக்காதுபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!மகளிரின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தின் பெயரை மாற்றுவது, மக்கள் நலனுக்கான நிர்வாக நடவடிக்கை அல்ல; அரசியல் அடையாளங்களை அழிக்கும் முயற்சி மட்டுமே.
ஒரு திட்டத்தின் வெற்றியை அதன் பெயர் தீர்மானிக்காது; அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றம்தான் தீர்மானிக்கும்.பெயர் மாற்றங்களில் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களிலும், சேவைகளை வலுப்படுத்துவதிலும் செலவிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire