Paristamil Navigation Paristamil advert login

வட துருவமும் தென் துருவமும் எப்படி ஒன்றாக முடியும்; திருமாவுக்கு வைகோ கேள்வி

வட துருவமும் தென் துருவமும் எப்படி ஒன்றாக முடியும்; திருமாவுக்கு வைகோ கேள்வி

10 ஆடி 2026 வெள்ளி 12:04 | பார்வைகள் : 964


தவெகவும், திமுகவும் அகில இந்திய அளவில் ஓரணியில் திரள வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியது தனக்கு தூக்கி வாரிப்போட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; திமுக கூட்டணியிலும் தொடர்கிறோம். தவெகவும், திமுகவும் அகில இந்திய அளவில் ஓரணியில் திரள வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் சொன்னதாக வெளியான செய்தி, எனக்கு தூக்கி வாரிப்போட்டது. வடதுருவமும், தென் துருவமும் ஒன்று சேர முடியுமா?

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு எப்படி அமைச்சரவையில் பங்கெடுக்க முடியும் என்று நினைத்தது, அதிர்ச்சியாக இருந்ததால், நான் அவருக்கு (திருமா) நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று சொன்னேன்.  புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அவர் அரசியலில் உயர வேண்டும் என்று என்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளேன்.  15 ஆண்டுகளாக பக்கபலமாக இருந்துள்ளேன். எதிர்காலத்திலும் அப்படித்தான் இருப்பேன். அவரது மனம் புண்படுமானால், அந்த வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சியில் அமைச்சரவையில் இருப்போம். திமுகவுடன் தான் உறவு வைத்துக்கொள்வோம் என்று சொல்வது உலகத்திலேயே கேள்விப்படாத விஷயமாக இருக்கிறதே என்று நான் அந்தக் கருத்தை சொன்னேன். இப்போது, அதை வாபஸ் பெற்று விட்டேன். இவ்வாறு அவர்  கூறினார்

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்