Parcoursup சேர்க்கை: 126,000 மேற்பட்ட மாணவர்கள் காத்திருப்பு!!
11 ஆடி 2026 சனி 22:21 | பார்வைகள் : 2770
கூடுதல் சேர்க்கை (Phase complémentaire) செயல்முறை செப்டம்பர் 10 வரை தொடரும். உயர்கல்வி சேர்க்கைக்கான Parcoursup தளத்தின் முக்கிய சேர்க்கை கட்டம் இன்று நிறைவடைந்த நிலையில், மொத்தம் 8,72,000 விண்ணப்பதாரர்களில் 1,26,652 பேர் இன்னும் எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்திலும் சேர்க்கை வாய்ப்பைப் பெறாமல் காத்திருக்கின்றனர் என்று தளத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கையில்:
- 57,024 பேர் இந்த ஆண்டு Baccalauréat தேர்ச்சி பெற்ற மாணவர்கள்.
- 46,216 பேர் ஏற்கனவே உயர்கல்வியில் பயிலும் நிலையில், வேறு படிப்புக்கு மாற விரும்பும் மாணவர்கள்.
- 23,412 பேர் வெளிநாடுகளில் கல்வி கற்கும் விண்ணப்பதாரர்கள்.
உயர்கல்வி மற்றும் தேசிய கல்வி அமைச்சகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு பத்து உயர்நிலைப் பாடசாலை மாணவர்களில் சுமார் ஒன்பது பேர் தாங்கள் விரும்பிய படிப்புகளில் குறைந்தது ஒரு சேர்க்கை வாய்ப்பையாவது பெற்றுள்ளனர். அதேபோல், படிப்பை மாற்ற விரும்பிய மாணவர்களில் பத்தில் ஏழு பேருக்கு மேற்பட்டோர் குறைந்தது ஒரு சேர்க்கை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
ஜூலை 1 முதல், சேர்க்கை வாய்ப்பு கிடைக்காத 5,781 புதிய பட்டதாரி (bacheliers)மாணவர்களும் 719 மறுசேர்க்கை மாணவர்களும், தங்களுக்கு பொருத்தமான கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க உதவுவதற்காக உயர்கல்வி அணுகல் ஆணையங்களின் (Commissions d'accès à l'enseignement supérieur) தனிப்பட்ட ஆலோசனைச் சேவையை நாடியுள்ளனர்.
கூடுதல் சேர்க்கை கட்டம் செப்டம்பர் 10 வரை தொடரும். இந்த காலத்தில், இன்னும் வெற்றிடங்கள் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பதாரர்கள் புதிய விருப்பங்களை (vœux) சமர்ப்பிக்கலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire