தேசிய தினக் கொண்டாட்டம் மற்றும் கால்பந்து அரையிறுதிப் போட்டி காரணமாக மூடப்படும் பல Métro நிலையங்கள் !!
13 ஆடி 2026 திங்கள் 09:03 | பார்வைகள் : 3629
Paris நகரில் நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டங்கள், Champ-de-Mars பகுதியில் நடைபெறும் feu d’artifice நிகழ்ச்சி மற்றும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை முன்னிட்டு, பல Métro நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 13 ஆம் திகதி திங்கட்கிழமையும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் தலைநகரின் போக்குவரத்து சேவைகளில் மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் வழக்கமாக ஜூலை 14 அன்று நடைபெறும் Champ-de-Mars feu d’artifice நிகழ்ச்சியும் அதற்கு முன்னதாக நடைபெறும் இசை நிகழ்ச்சிகளும், Nice தாக்குதலின் பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்வுகளை முன்னிட்டு ஜூலை 13 ஆம் திகதிக்கே மாற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து திங்கட்கிழமை மாலை 18.00 மணி முதல் Métro வழித்தடங்கள் 6,8 மற்றும் 9 இல் உள்ள Passy, Boissière, Bir-Hakeim, Cambronne, Sèvres-Lecourbe, Dupleix, Trocadéro, École Militaire, Alma-Marceau மற்றும் Saint-Philippe-du-Roule ஆகிய Métro நிலையங்கள் மூடப்படுகின்றன. மேலும் இரவு 23.00 மணி முதல் Rue de la Pompe நிலையமும் சேவையிலிருந்து விலகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாரம்பரிய இராணுவ அணிவகுப்பு ஜூலை 14 அன்று திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதுடன், அதே நாளில் France மற்றும் Espagne அணிகளுக்கிடையிலான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியும் இடம்பெறவுள்ளது. இதனால் RER A மற்றும் Métro வழித்தடங்கள் 1, 2, 6, 8, 12 மற்றும் 13 இல் உள்ள Charles de Gaulle - Étoile, George V, Argentine, Tuileries, Concorde, Franklin Roosevelt, Champs-Élysées - Clemenceau, Kléber மற்றும் Boissière உள்ளிட்ட நிலையங்கள் நாள் முழுவதும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire