பிரான்ஸ்–ஸ்பெயின் போட்டிக்கு முன் நிஸ் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி!!
14 ஆடி 2026 செவ்வாய் 08:35 | பார்வைகள் : 3269
இன்று இரவு 9 மணிக்கு (பிரான்ஸ் நேரப்படி) நடைபெறவுள்ள பிரான்ஸ்–ஸ்பெயின் அரையிறுதி போட்டிக்கு முன், 2016 ஜூலை 14 நிஸ் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியாக ஒரு நிமிட மௌனம் கடைப்பிடிக்கப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். இந்த முடிவை FIFA தலைவர் Gianni Infantino ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நிஸ் தாக்குதலுக்கு பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கால்பந்து உலகம் உயிரிழந்தவர்களை நினைவுகூருகிறது. “அவர்களை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்” என்று மக்ரோன் தெரிவித்ததுடன், பிரான்ஸ் அரசின் கோரிக்கையை ஏற்ற FIFA தலைவருக்கு நன்றியும் தெரிவித்தார்.
இந்த அஞ்சலி நிகழ்வை நடத்துமாறு நிஸ் நகர மேயர் எரிக் சியோட்டி, FIFA-வுக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தார். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் உயிர் தப்பியவர்களுடன் உலக கால்பந்து ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஒரு நிமிட மௌனம் அமையும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், பிரெஞ்சு கால்பந்து சம்மேளனம் (FFF) இந்த முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கியது. அதன் தலைவர் Philippe Diallo சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து ஒரு நிமிட மௌனத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இறுதியில், பிரான்ஸ் அரசும் FFF-மும் வைத்திருந்த கோரிக்கை வெற்றி பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire