தனுஷ் எடுத்த அதிரடி முடிவு..
14 ஆடி 2026 செவ்வாய் 16:05 | பார்வைகள் : 674
தனுஷின் நிறைய படங்களுக்கு அனிருத் மட்டுமே இசையமைத்து வந்தார். இருவரின் கூட்டணியிலும் உருவான படங்களில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
ஆனால் ஒரு கட்டத்தில் தனுஷுக்கும், அனிருத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் தனுஷின் படங்களுக்கு தொடர்ந்து ஜிவி பிரகாஷ் மட்டுமே இசையமைத்து வந்தார். ஆனால், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பற்றி தனுஷ் நடித்து வரும் ஓம் படத்திற்கு சாய் அபயஙர் இசையமைத்திருக்கிறார்.
அதேபோல் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள தமிழ் முருகன் படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசை. அப்படியென்றால் ஜிவி பிரகாஷ் என்னாச்சி என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
ஜிவி பிரகாஷின் இசையில் நிறைய படங்களில் நடித்து விட்டேன்.. எனக்கேது போர் அடித்து விட்டது.. ஒரு புதிய கூட்டணியை உருவாக்க ஆசைப்படுகிறேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம் தனுஷ்..






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire