உலகக்கிண்ண அரையிறுதியில் ஸ்பெயினிடம் வீழ்ந்த பிரான்ஸ் – இறுதிப்போட்டி கனவு சிதறியது!!
15 ஆடி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 5494
டல்லாஸ் நகரில் நேற்று 14 ஆம் திகதி நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. கடந்த யூரோ 2024 மற்றும் நேஷன்ஸ் லீக் 2025 தொடர்களிலும் ஸ்பெயின் அணியிடம் பின்னடைவை சந்தித்திருந்த பிரான்ஸ், இம்முறையும் எதிரணியின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது.
போட்டியின் 22ஆவது நிமிடத்தில் Lucas Digneயின் தவறான தடுப்பால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை Mikel Oyarzabal வெற்றிகரமாக கோலாக்கி ஸ்பெயினுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து Kylian Mbappé மற்றும் Adrien Rabiot ஆகியோர் தாக்குதல் முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும், பிரெஞ்சு அணியின் ஆட்டத்தில் ஒற்றுமை காணப்படவில்லை. மேலும், William Saliba காயம் காரணமாக வெளியேறியதும் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணி நடுப்பகுதியை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், 58ஆவது நிமிடத்தில் Pedro Porro இரண்டாவது கோலைப் பதிவு செய்து வெற்றியை உறுதிப்படுத்தினார். பின்னர் பிரெஞ்சு அணி பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
அதேவேளை, பிரான்ஸ் அணி மூன்றாம் இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்து – அர்ஜென்டினா மோதலின் தோல்வியடையும் அணியை, சனிக்கிழமை மியாமியில் எதிர்கொள்ளவுள்ளது. மேலும், அந்தப் போட்டியே பயிற்சியாளர் Didier Deschampsஇன் 14 ஆண்டுகால பயிற்சியாளர் பணியின் இறுதி போட்டியாக அமையவுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire