பாடசாலை தொடக்க உதவித்தொகை (ARS) வழங்கப்படும் திகதிகள் அறிவிப்பு!!
16 ஆடி 2026 வியாழன் 14:40 | பார்வைகள் : 3601
குடும்பத்தின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் பாடசாலை தொடக்க உதவித்தொகை (Allocation de Rentrée Scolaire - ARS), மயோத் மற்றும் ரீயூனியன் (La Réunion) தீவுகளில் ஆகஸ்ட் 4 அன்று வழங்கப்படும். பின்னர் பிரான்ஸ் முழுவதும் Guadeloupe, Guyane மற்றும் Martinique பகுதிகளில் ஆகஸ்ட் 18 அன்று வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை குடும்பத்தின் ஆண்டு வருமானம், பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் 2026 ஜூலை 31 நிலவரப்படி 6 முதல் 18 வயதுக்குள் உள்ள பாடசாலையில் (அரசு அல்லது தனியார்) பயிலும் குழந்தைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
உதாரணமாக:
- 1 குழந்தை: ஆண்டு வருமானம் €28,956-ஐ தாண்டக்கூடாது.
- ஒவ்வொரு கூடுதல் குழந்தைக்கும் வருமான வரம்பு €6,682 அதிகரிக்கும்.
அதன்படி:
- 2 குழந்தைகள்: €35,638 வரை
- 3 குழந்தைகள்: €42,320 வரை
- 4 குழந்தைகள்: €48,583 வரை
குழந்தையின் வயதின்படி வழங்கப்படும் தொகை
- 6–10 வயது: €426.87
- 11–14 வயது: €450.41
- 15–18 வயது: €466.02
ARS பெற என்ன செய்ய வேண்டும்?
CAF-இல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பங்கள், 6 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக எந்த விண்ணப்பமும் செய்ய வேண்டியதில்லை. உதவித்தொகை தானாகவே வழங்கப்படும்.
ஆனால் 16 முதல் 18 வயது குழந்தைகள் உள்ள குடும்பங்கள், குழந்தை இன்னும் பள்ளியிலோ அல்லது தொழில்பயிற்சியிலோ (apprentissage) இருப்பதை உறுதிப்படுத்தும் சுய அறிவிப்பை (déclaration sur l'honneur) சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், 2026 டிசம்பர் 31-க்குப் பிறகு 6 வயது நிறைவடையும் குழந்தை பாடசாலையின் முதல் வகுப்பில் (CP) சேர்க்கப்பட்டிருந்தால், அந்தக் குழந்தைக்கான பாசாலை சான்றிதழை CAF அல்லது MSA-க்கு அனுப்ப வேண்டும் என்று DSS தெரிவித்துள்ளது.
CAF அல்லது MSA-வில் இதுவரை பதிவு செய்யாத குடும்பங்கள், இந்த உதவித்தொகையைப் பெற தாங்களே விண்ணப்பிக்க வேண்டும்.
வருமானம் சற்று அதிகமாக இருந்தாலும் உதவி கிடைக்கும்
CAF, குடும்பத்தின் வருமானம் மற்றும் அனுமதிக்கப்பட்ட வரம்புக்கிடையேயான வித்தியாசத்தைக் கணக்கிட்டு, அந்தத் தொகையை ARS-இலிருந்து கழிக்கும்.
உதாரணம்:
8 வயது குழந்தை உள்ள குடும்பத்தின் 2024 ஆண்டு வருமானம் €29,100 என வைத்துக்கொள்வோம்.
- வருமான வரம்பு: €28,956
- அதிகமான தொகை: €144
- 6–10 வயதுக்கான ARS: €426.87
எனவே வழங்கப்படும் ARS:
€426.87 − €144 = €282.87 அதாவது, இந்தக் குடும்பத்திற்கு €282.87 வழங்கப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire