காவல்துறையினரின் துப்பாக்கி பயன்பாட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் பேரணிக்கு அழைப்பு!!
18 ஆடி 2026 சனி 07:30 | பார்வைகள் : 2505
காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் அதிகாரிகள் துப்பாக்கியை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில், அவர்களின் நடவடிக்கை சட்டபூர்வமானதாகக் கருதப்படும் சட்டமசோதாவிற்கு எதிராக, பல்வேறு சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி நாடளாவிய பேரணியை நடத்த அழைப்பு விடுத்துள்ளன. குறித்த சட்டமசோதா கடந்த ஜூலை மாதம் 7ஆம் திகதி தேசிய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், தற்போது அது செனட் சபையின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சட்டமசோதா இடதுசாரி அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது பாதுகாப்புப் படையினருக்கு "தண்டனையின்றி உயிரைப் பறிக்கும் அனுமதியை" வழங்கும் ஆபத்தான சட்டமாக மாறக்கூடும் என்றும், குறிப்பாக சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உயிர்களை இலக்காகக் கொண்ட வன்முறைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் என்றும் எதிர்ப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
SAVE (Stop aux violences d'État), Comité Adama, Flagrant Déni, Syndicat de la Magistrature, Syndicat des Avocats de France, Association des Avocats Pénalistes, Amnesty International France உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த தேசிய பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், இந்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி தேசிய சபையின் இணையதளத்தில் தொடங்கப்பட்ட மனுவில் இதுவரை சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர். குறித்த மனு ஜூலை மாதம் 21ஆம் திகதி தேசிய சபையின் சட்ட விவகாரக் குழுவில் பரிசீலிக்கப்படவுள்ளதுடன், அதன் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை குறித்து உறுப்பினர்கள் தீர்மானிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire