விடுதி பணியாளராக நடித்து பெரும் பணத் திருட்டு!!
19 ஆடி 2026 ஞாயிறு 21:00 | பார்வைகள் : 1246
Nice நகரின் Promenade des Anglais பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த உக்ரைன் சுற்றுலாப் பயணிகள், சுமார் 100,000 யூரோ மதிப்புள்ள பொருட்களை ஒரு மோசடி நபரால் இழந்துள்ளனர்.
ஜெர்மனியில் வசிக்கும் இந்த சுற்றுலாப் பயணிகள் வரவேற்பில் பதிவு செய்த பின், ஐம்பதுகளின் வயதுகளில் உள்ள ஒரு நபர் அவர்களை அணுகி, தன்னை விடுதி பணியாளராக அறிமுகப்படுத்தி, பைகளை அறைக்கு எடுத்துச் செல்ல முன்வந்தார்.
பைகளை எடுத்துச் செல்லும் போது, வேறு ஒரு போலிஅறை திறப்பு அடடையைக் கொடுத்து விட்டு, உண்மையான அட்டையால் கதவைத் திறந்து . சுற்றுலாப் பயணிகள்வெளியே சென்று இரவு 1 மணிக்கு திரும்பியபோது, அட்டை செயல்படவில்லை. விடுதி உதவியுடன் அறைக்குள் நுழைந்தபோது, அனைத்து மதிப்புள்ள பொருட்களும் காணாமல் போனது.
Nice பொது வழக்கறிஞர் டாமியன் மார்டினெல்லி திருட்டின் மதிப்பு சுமார் 100,000 யூரோ என உறுதிப்படுத்தினார். கடுமையான திருட்டு குற்றச்சாட்டில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது;






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire