Paristamil Navigation Paristamil advert login

10 கோல்களுடன் Golden Bootஐ வென்ற எம்பாப்பே; மெஸ்சி ஏமாற்றம்!!

10 கோல்களுடன் Golden Bootஐ வென்ற எம்பாப்பே; மெஸ்சி ஏமாற்றம்!!

20 ஆடி 2026 திங்கள் 10:13 | பார்வைகள் : 4029


2026 கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணியின் Lionel Messi கோல் அடிக்கத் தவறிய நிலையில், பிரெஞ்சு அணியின் தலைவர் Kylian Mbappé இரண்டாவது தடவையாக 10 கோல்களுடன் தொடரின் ‘கோல்டன் பூட்’ (Golden Boot) விருதை கைப்பற்றினார். இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அரையிறுதியில் பிரான்ஸ் அணி வெளியேறிய ஏமாற்றம் நீங்காதபோதிலும், தொடர்ந்து இரண்டாவது உலகக் கிண்ணத் தொடரிலும் அதிக கோல்கள் அடித்த வீரராக எம்பாப்பே சாதனை படைத்துள்ளார். மெஸ்சி 8 கோல்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்ததுடன், இங்கிலாந்தின் Jude Bellingham மற்றும் நோர்வேயின் Erling Haaland தலா 7 கோல்களுடன் அடுத்த இடங்களைப் பெற்றனர்.

இதன்மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் எம்பாப்பே முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். 2018 உலகக் கிண்ணத்தில் 4, 2022 தொடரில் 8 மற்றும் 2026 தொடரில் 10 என மொத்தம் 22 கோல்களைப் பதிவு செய்துள்ள அவர், 21 கோல்களுடன் உள்ள லியோனல் மெஸ்சியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். 27 வயதான எம்பாப்பே, எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடர்களிலும் தனது சாதனையை மேலும் உயர்த்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.