எரிபொருள் விலை மீண்டும் உயர்வு: 2 யூரோவை தாண்டிய பெட்ரோல் விலை !!
20 ஆடி 2026 திங்கள் 15:29 | பார்வைகள் : 852
அதிகம் பயன்படுத்தப்படும் SP95-E10 பெட்ரோலின் சராசரி விலை மீண்டும் லிட்டருக்கு 2 யூரோவை தாண்டியுள்ளது. 7,255 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் தரவுகளின் அடிப்படையில், ஒரு லிட்டர் SP95-E10 பெட்ரோல் சராசரியாக 2.005 யூரோவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 6.8 சென்ட் (3.5%) அதிகரிப்பாகும். அதேவேளை, அதிகம் பயன்படுத்தப்படும் டீசல் எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 2.105 யூரோவாக பதிவாகியுள்ளது. இது கடந்த வாரத்தை விட 12.1 சென்ட் (6%) அதிகமாகும். மேலும், SP98 பெட்ரோலின் சராசரி விலை 2.090 யூரோவாக உயர்ந்துள்ளதுடன், கடந்த ஏழு நாட்களில் 7.1 சென்ட் அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வுக்கு உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்களே முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன. ரஷ்யா தனது உள்நாட்டு எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் டீசல் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதுடன், மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்ததும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. சமாதான உடன்பாட்டைத் தொடர்ந்து விலைகள் குறுகிய காலம் குறைந்திருந்தபோதிலும், தற்போது மீண்டும் உயர்வுப் பாதையை எட்டியுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire