கனடாவின் வேன்கூவர் தீவு அருகே கடலடியில் நிலநடுக்கம்
21 ஆடி 2026 செவ்வாய் 12:00 | பார்வைகள் : 362
கனடாவின் வேன்கூவர் தீவு அருகே ஆழ்கடல் பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 11:41 மணிக்கு இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
வேன்கூவர் தீவின் வடக்கு முனையில் அமைந்துள்ள ‘போர்ட் ஹார்டி’ பகுதிக்கு தென்மேற்கே 219 கிலோமீட்டர் தொலைவில், கடற்பரப்பிற்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலடியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், இதனால் சுனாமி ஏற்படுவதற்கான அபாயம் எதுவுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தின் மையம் வேன்கூவர் தீவின் முக்கிய நகரங்களான ‘கேம்ப்பெல் ரிவர்’ மற்றும் ‘போர்ட் ஆல்பர்னி’ ஆகியவற்றின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
நிலநடுக்க மையத்தில் இருந்து தென்மேற்கே 450 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள ‘மெட்ரோ வேன்கூவர்’ பகுதி வரை இந்த அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வேன்கூவர் தீவின் வடக்குப் பகுதிகளிலும் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire