வங்காளதேசத் தொடரில் புதிய சாதனைக்கு சொந்தக்காரரான ஜிம்பாப்வே கேப்டன்
21 ஆடி 2026 செவ்வாய் 12:18 | பார்வைகள் : 329
சிக்கந்தர் ரஸா ஜிம்பாப்வே அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய ஜிம்பாப்வே, டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
இந்தத் தொடரில் விளையாடியதன் மூலம் சிக்கந்தர் ரஸா (Sikandar Raza)புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
அணித்தலைவராக செயல்பட்ட சிக்கந்தர் ரஸா 314 போட்டிகளில் விளையாடி, அதிக போட்டிகளில் விளையாடிய ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்பு ஹாமில்டன் மஸகட்சா (Hamilton Masakadza) 313 போட்டிகளில் விளையாடி இருந்தார்.
ரஸா 22 டெஸ்ட், 156 ஒருநாள் போட்டிகள் மற்றும் 136 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 9,095 ஓட்டங்கள் மற்றும் 245 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire