மேற்கிந்திய தீவுகளில் கெத்து காட்டும் பாபர் அஸாம்! 455 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான்
21 ஆடி 2026 செவ்வாய் 14:27 | பார்வைகள் : 1026
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 455 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பாகிஸ்தான் ஆடவர் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான பயிற்சி டெஸ்ட் ட்ரினிடாட்டில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 455 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அணித்தலைவர் பாபர் அஸாம் (Babar Azam) 100 ஓட்டங்களும், அஸான் அவைஸ் 100 ஓட்டங்களும், ஷான் மசூத் 70 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர் கூப்பர் 1 ரன்னில் அவுட் ஆனார்.
தகெனரின் சந்தர்பால் நிதானமாக ஆட, கவேம் ஹோட்ஜ் வேகமாக பவுண்டரிகளை விரட்டினார். இந்தக் கூட்டணி 148 ஓட்டங்கள் குவிக்க, தகெனரின் சந்தர்பால் 51 (155) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெகி ஜோஸப் (5), ஜோஷுவா (0) சொதப்பினர்.
மறுமுனையில் சதத்தை நோக்கி பயணித்த கவேம் ஹோட்ஜ் 92 ஓட்டங்களில் lbw ஆகி வெளியேறினார்.
ஜித் கூலி 44 ஓட்டங்களுடன் களத்தில் நிற்க, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மொஹம்மது அலி 3 விக்கெட்டுகளும், ஆமீர் ஜமால் மற்றும் அலி உஸ்மான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire