Paristamil Navigation Paristamil advert login

இணைய வசதி இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை! விரைவில் அறிமுகம்

இணைய வசதி இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை! விரைவில் அறிமுகம்

22 ஆடி 2026 புதன் 10:42 | பார்வைகள் : 375


இந்தியாவில் இணைய வசதி இல்லாமலேயே யுபிஐ மூலம் பணம் செலுத்தும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் பெரும்பாலானோர் யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இணைய வசதி இல்லாத மலைப்பகுதிகள், விமானங்கள் மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களில் யுபிஐ பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை உள்ளது.

இதற்காக, இணையம் இல்லாமலேயே யுபிஐ பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் உள்ள NFC (Near Field Communication) தொழில்நுட்பத்தை யுபிஐ சேவையிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், POS இயந்திரங்களில் இணைய வசதி இல்லாமலேயே மொபைல் போன் மூலம் பணம் செலுத்த முடியும்.

முதற்கட்டமாக, இணையம் இல்லாமல் ரூ.2,000 வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.