Paristamil Navigation Paristamil advert login

காணாமல் போன "பைசன்" ஜோடி காதல்?

காணாமல் போன  "பைசன்" ஜோடி காதல்?

22 ஆடி 2026 புதன் 17:05 | பார்வைகள் : 400


தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காதல் கதைகள் உள்ளன. ஒரு சில கள்ளக் காதல் கதைகளும் உள்ளன. அப்படியான கள்ளக் காதல் கதைகள் திரையுலகில் உள்ளவர்களுக்கும் நெருக்கமான சிலருக்கும் மட்டுமே தெரியும். அதைக் கண்டும் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், ரகசியமான காதல் என சில காதல் இருக்கின்றன. அவை வெளிச்சத்திற்கு வரவே வராது. அவற்றில் சில அப்படியே திருமணம் வரை போய்விடும், சில காணாமல் போய்விடும்.

அப்படி வெளிச்சத்திற்கு வராமல் விலகிப் போய் காணாமல் போகக் கூடிய காதலாக ஒரு காதல் கடந்த சில நாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

ஓரிரு வருடத்திற்கு முன்பு நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் இருவரது முத்தப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. அதன்பின்புதான் அது பற்றிய தகவல் வெளியில் வந்தது. ஆனால், இருவரும் அவர்களது காதல் பற்றி இதுவரையில் வெளியில் சொன்னதில்லை.

இருவரும் இணைந்து நடித்த "பைசன்" படத்தில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டிருக்கலாம் என்றார்கள். அப்பட விழாக்களில் இருவரும் கலந்து கொண்ட வீடியோக்களைப் பார்த்த போது அவர்களது உடல்மொழியும் அது உண்மைதான் என்று சொன்னது.

சில தினங்களுக்கு முன்பு அனுபமா பதிவிட்ட ஒரு பதிவிற்குப் பிறகு இருவரும் பிரிந்துவிட்டார்களா என்று பரபரப்பாகி உள்ளது. சம்பந்தப்பட்ட இருவரும் தங்களது காதல் பற்றி இதுவரையில் வெளியில் சொன்னதில்லை. அதனால், அவர்கள் விலகிச் சென்றது பற்றியும் ஏன் சொல்லப் போகிறார்கள்.

பொருத்தமான ஜோடி என்று பேசப்பட்டது. யார் கண் பட்டதோ, அல்லது யார் தவறு செய்தார்களோ, பரபரப்பை மட்டும் ஏற்படுத்தி காணாமல் போகப் போகிறது இந்தக் காதல்.

"பைசன்" ஜோடி, தற்போது காதலுக்கு "பை பை" சொல்லிக் கொண்டது உண்மையா என்பது எப்படியும் தெரிய வரும்.