Paristamil Navigation Paristamil advert login

வலியுடன் ஆடி சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ்! கடைசி ஓவரில் வென்ற அணி

வலியுடன் ஆடி சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ்! கடைசி ஓவரில் வென்ற அணி

23 ஆடி 2026 வியாழன் 16:06 | பார்வைகள் : 233


டெர்பிஷிரே அணிக்கு எதிரான ராயல் லண்டன் ஒருநாள் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார்.

கவுண்டி மைதானத்தில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் போட்டியில் Durham மற்றும் Derbyshire அணிகள் மோதின.

முதலில் ஆடிய Derbyshire அணி 50 ஓவர்களில் 256 ஓட்டங்கள் எடுத்தது. மார்டின் ஆண்டர்சன் 112 ஓட்டங்களும், ப்ரூக் கஸ்ட் 48 ஓட்டங்களும் எடுத்தனர். லுக் ராபின்சன் 3 விக்கெட்டுகளும், கஃபாரி 2 விக்கெட்டுகளும், மிண்டோ மற்றும் ஜார்ஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய Durham அணியில் பென் ஸ்டோக்ஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இறுதிவரை நின்று சதம் அடித்தார்.

இதன்மூலம் Durham அணி 49.1 ஓவர்களில் 257 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்கள் விளாசினார்.

சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னர் பென் ஸ்டோக்ஸ் அடித்த சதம் இதுவாகும்.

தொடர்ந்து தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட போதிலும் பென் ஸ்டோக்ஸ் கடைசிவரை களத்தில் நின்று தனது அணியை வெற்றி பெற வைத்தார்.