Decathlon ஊழியர்களுக்கு 2,000 யூரோக்கள் மதிப்பிலான இலவச பங்குகள்!!
18 ஆனி 2026 வியாழன் 15:04 | பார்வைகள் : 3397
Decathlon நிறுவனம் தனது உலகளாவிய ஊழியர்களில் பெரும்பாலோருக்கு சராசரியாக 2,000 யூரோங்கள் மதிப்பிலான இலவச பங்குகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் சம்பள உயர்வைக் கோரி பிரான்சில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்கு பத்து நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்தது மூன்று மாத சேவைக்காலம் கொண்ட ஊழியர்கள் தகுதி பெறுவர். ஆனால், பங்குகள் முழுமையாக அவர்களுக்குச் சொந்தமாக மாற மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். மேலும், 16 ஜூன் 2029 வரை நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Decathlon தலைமை நிர்வாக அதிகாரி Javier Lopez Segoviaஇன் கூற்றுப்படி, இந்த முயற்சி நிறுவன வளர்ச்சியில் ஊழியர்களையும் பங்குதாரர்களாக மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது 56,000 ஊழியர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்; புதிய திட்டத்தால் இந்த எண்ணிக்கை 90,000 ஆக உயரலாம்.
ஆனால் தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பை விமர்சித்துள்ளன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே கிடைக்கும் பங்குகள், குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களின் உடனடி வாழ்க்கைச் செலவுச் சிக்கல்களுக்கு தீர்வாகாது என்றும், இது உண்மையான சம்பள உயர்வுக்குப் பதிலாக ஒரு விளம்பர நடவடிக்கையாகத் தெரிகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire