Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸில் கடும் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

பிரான்ஸில் கடும் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

19 ஆனி 2026 வெள்ளி 08:04 | பார்வைகள் : 3293


பிரான்சின் வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி,  வாரத்தின் தொடக்கத்தில் 33 முதல் 40 பாகை செல்சியஸ் வரை வெப்பம் நிலவியது.

வியாழக்கிழமையன்று இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் இருந்தாலும், வார இறுதியில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை எட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை அன்று, கோரெஸ் (Corrèze) மாவட்டத்தின் பிரைவ்-லா-கயார்ட் (Brive-la-Gaillarde) நகரில் வெப்பநிலை கிட்டத்தட்ட 40 பாகை செல்சியஸை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடும் வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், தீ விபத்துகளைத் தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தண்ணீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், நீர்வளத்தைப் பாதுகாக்கவும் பொதுமக்கள் தண்ணீரை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பகல் நேரங்களில் கடுமையான உடலுழைப்பைத் தவிர்த்தல், போதிய அளவு தண்ணீர் குடித்தல் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட நலிவடைந்தோரின் உடல்நிலையைக் கண்காணித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3