தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் - பிரிட்டன் கோரிக்கை
19 ஆனி 2026 வெள்ளி 05:18 | பார்வைகள் : 1541
கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் போரினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீண்டும் தங்களின் வீடுகளுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டனின் சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் ஜென்னி சேப்மேன் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருக்கும் பள்ளி ஒன்றை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் இந்த விடுத்த கோரிக்கையை விடுத்தார்.
இதுகுறித்து அமைச்சர் ஜென்னி சேப்மேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இஸ்ரேல் நிச்சயமாக தெற்கு லெபனானில் இருந்து வெளியேற வேண்டும். உலகில் எங்கு மக்கள் இடம்பெயர்ந்தாலும் அது அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பையும் சீர்குலைவையும் ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம் எ தெரிவித்துள்ளார்.
அதனால்தான், தங்களின் சொந்த ஊர்களை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் தங்களின் வீடுகளுக்குத் திரும்புவதற்கான தகுந்த சூழலை உருவாக்க நாம் விரும்புகிறோம். அவர்கள் நீண்ட காலத்திற்கு எவ்வித அச்சமும் இன்றி தங்களின் வீடுகளில் வாழ்வதை நாம் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் கடுமையான மோதல்கள் காரணமாக, லெபனான் எல்லையோரப் பகுதிகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire