Paristamil Navigation Paristamil advert login

லண்டனில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி

லண்டனில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி

20 ஆனி 2026 சனி 13:35 | பார்வைகள் : 1453


இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

பெட்ஃபோர்ட் பகுதிக்கு தெற்கே அமைந்துள்ள ரயில் பாதையில், 19.06.2026 மாலை 5.15 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து நடந்தபோது, முன்னோக்கி தூக்கி எறியப்பட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் 22 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் 56 பேருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்து நடந்த பகுதிக்கு 20க்கும் மேற்பட்ட நோயாளர் காவு வாகனங்கள் சென்றதோடு வான்வழியாக விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் உட்பட பெருமளவிலான குழுக்கள் உடனடியாக விபத்து இடம்பெற்ற இடத்தை அடைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரி ஸ்டூவர்ட் கண்டி தெரிவித்துள்ளார்.

 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3