பாடசாலை தொடக்க உதவித்தொகை (ARS) பெற விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியவை!!
21 ஆனி 2026 ஞாயிறு 15:14 | பார்வைகள் : 4388
பாடசாலை தொடக்க உதவித்தொகை (Allocation de Rentrée Scolaire - ARS) வழக்கம்போல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும். ஆனால் 16 முதல் 18 வயதுக்குள் உள்ள குழந்தைகளின் பெற்றோர், இந்த உதவித்தொகையை தொடர்ந்து பெற ஒரு முக்கியமான நடைமுறையை நிறைவேற்ற வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் போல, சுமார் 30 லட்சம் குடும்பங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் ARS வழங்கப்படுகிறது. வருமான வரம்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த உதவி, பாடசாலை தொடக்கத்துடன் தொடர்புடைய செலவுகளை (பாடசாலை உபகரணங்கள், ஆடைகள், கல்விப் பொருட்கள் போன்றவை) சமாளிக்க உதவுகிறது.
இந்த உதவித்தொகை 6 முதல் 18 வயது வரை பாடசாலையில் கல்வி கற்கும் குழந்தைகளுக்காக வழங்கப்படுகிறது. அதாவது, 16 செப்டம்பர் 2008 முதல் 31 டிசம்பர் 2020 வரை பிறந்த குழந்தைகள் இதற்கு தகுதியானவர்கள்.
2026 கல்வியாண்டுக்கான ARS தொகை:
- 6 முதல் 10 வயது குழந்தைகள்: 426,87 யூரோக்கள்
- 11 முதல் 14 வயது குழந்தைகள்: 450,41 யூரோக்கள்
- 15 முதல் 18 வயது குழந்தைகள்: 466,02 யூரோக்கள்
6 முதல் 15 வயது குழந்தைகளுக்கு எந்த நடவடிக்கையும் தேவையில்லை. CAF "தகுதி நிபந்தனைகள் பூர்த்தியாகி, உங்கள் கோப்பு புதுப்பிக்கப்பட்டிருந்தால், நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 முதல் 18 வயது குழந்தைகளுக்கான கட்டாய அறிவிப்பு
இந்த ஆண்டு ARS தொகை:
- பிரான்ஸ் பிரதான நிலப்பகுதியில்: 19 ஆகஸ்ட் 2026
- மயோட் மற்றும் ரீயூனியன் தீவுகளில்: 5 ஆகஸ்ட் 2026 என வழங்கப்படும்.
ஆனால், 16 முதல் 18 வயது (16 செப்டம்பர் 2008 முதல் 31 டிசம்பர் 2010 வரை பிறந்தவர்கள்) கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள், குழந்தையின் கல்வி நிலையை இணையத்தில் அறிவிக்க வேண்டும். இதற்குக் காரணம், இந்த வயதில் பலர் உயர்நிலைப் பாடசாலையில் தொடரலாம், சிலர் தொழிற்பயிற்சி (apprentissage) தேர்வு செய்யலாம், அல்லது சிலர் கல்வியை நிறுத்தி வேலைவாய்ப்பில் சேரலாம்.
எப்படி அறிவிக்க வேண்டும்?
ஜூலை மாதம் முதல் CAF இணையதளத்தில் இந்த நடைமுறையை மேற்கொள்ளலாம். CAF குடும்பங்களுக்கு மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலம் நினைவூட்டல் அனுப்பும். நீங்கள் Mon Compte பகுதியில்அல்லது "Caf - Mon Compte" மொபைல் செயலியில் உள்நுழைந்து, உங்கள் குழந்தை 2026 கல்வியாண்டில்:
- பாடசாலையில் கல்வி கற்கிறாரா,
- மாணவரா,
- அல்லது பயிற்சியாளராக (apprenti) உள்ளாரா
என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பயிற்சியாளராக இருந்தால், 2026-2027 கல்வியாண்டில் மாத சம்பளம் 1.144,21 யூரோக்களை தாண்டக்கூடாது.மேலும், குழந்தை தொடர்ந்து படிக்கும் கல்வி நிறுவனத்தின் விவரங்களையும் CAF கேட்கும்.
அறிவிக்க மறந்தால் என்ன ஆகும்?
இந்த நடைமுறையை நீங்கள் செய்யவில்லை என்றால், CAF உங்கள் குழந்தை இனி கல்வி கற்கவில்லை என்று கருதி உதவித்தொகை வழங்குவதை நிறுத்திவிடும். இதன் விளைவாக, பாடசாலை உபகரணங்களுக்கான முக்கியமான நிதி உதவியை நீங்கள் இழக்க நேரிடலாம் அல்லது முதலில் செலவுகளை நீங்களே ஏற்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
2026-ல் CP (முதலாம் வகுப்பு) செல்லும் 6 வயதுக்குக் குறைவான குழந்தைகள் 2027ல் தான் 6 வயதை அடையவிருக்கும் குழந்தை 2026-ல் ஏற்கனவே CP வகுப்பில் சேர்ந்தால், அவர்களும் ARS பெற முடியும். அதற்காக:
- குழந்தையின் பாடசாலையில் இருந்து பாடசாலை சேர்க்கைச் சான்றிதழ் (certificat de scolarité) பெற வேண்டும்.
- அதை CAF-க்கு அனுப்ப வேண்டும் அல்லது
- Mon Compte பகுதி அல்லது CAF செயலி மூலம் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு செய்தால், அந்தக் குழந்தைக்கும் ARS உதவித்தொகை வழங்கப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire