49 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: RER, Transilien உள்ளிட்ட தொடருந்துகள் திங்கள்கிழமை முதல் ரத்து!!
21 ஆனி 2026 ஞாயிறு 21:35 | பார்வைகள் : 4035
தொடர்ந்து தீவிரமடைந்து வரும் கடும் வெப்ப அலை காரணமாக, Île-de-France Mobilités தனது போக்குவரத்து சேவைத் திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. இதன் விளைவாக RER மற்றும் Transilien ரயில் வழித்தடங்களில் சில சேவைகள் ரத்து செய்யப்படும். RER A பாதையில் மட்டும் தொடருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்.
பெரிய அளவிலான போக்குவரத்து பாதிப்புகள் எதிர்பார்ப்பு
ஜூன் 22 திங்கள்கிழமை காலை முதல், கடும் வெப்பம் காரணமாக Île-de-France பகுதியில் தொடருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்று IDFM அறிவித்துள்ளது. “தொடருந்து உள்கட்டமைப்புகள் மற்றும் தொடருந்து பெட்டிகளை பாதுகாப்பதற்கும், சேவைத் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து திட்டம் மாற்றியமைக்கப்படும். குறிப்பாக RER B பாதையில் பல தொ ரத்து செய்யப்படும்,” என்று IDFM தெரிவித்துள்ளது.
அதேபோல் RER C, D, E பாதைகளிலும், Transilien H, J, K, L, N, P, R, U மற்றும் V வழித்தடங்களிலும் தொடருந்து சேவைகள் குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. RER A மட்டும் திங்கள்கிழமை இயல்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளை எச்சரிக்கும் IDFM
பயணிகள் தங்கள் ரயில் சேவை இயங்குகிறதா என்பதை மொபைல் செயலிகள் மூலம் முன்கூட்டியே சரிபார்க்குமாறு IDFM அறிவுறுத்தியுள்ளது. மேலும் “முடிந்தவரை, குறிப்பாக உடல்நல ரீதியாக பாதிக்கப்படக்கூடிய நபர்கள், தங்களின் பயணங்களை ஒத்திவைக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்,” என்று IDFM தெரிவித்துள்ளது.
49 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இந்த திங்கள்கிழமை, Mathieu Lefèvre தெரிவித்ததன்படி, 49 பிரெஞ்சு மாவட்டங்கள் (départements) “கடும் வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை” நிலைக்கு மாற்றப்படுகின்றன. இது ஒரு சாதனை எண்ணிக்கையாகும். மேலும், 40 மாவட்டங்கள் ஆரஞ்சு எச்சரிக்கை நிலையில் இருக்கும்.
திங்கள்கிழமை நிலவரப்படி, சுமார் 3.5 கோடி மக்கள் (35 மில்லியன் பேர்) சிவப்பு வெப்ப எச்சரிக்கையின் கீழ் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் மக்கள்தொகையின் 90%க்கும் அதிகமானோர் ஆரஞ்சு அல்லது சிவப்பு வெப்ப எச்சரிக்கையின் கீழ் இருப்பார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire