கடும் வெப்ப அலை – 1,300-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடல்!!
22 ஆனி 2026 திங்கள் 15:41 | பார்வைகள் : 3549
கடும் வெப்ப அலை காரணமாக இன்று 22ம் திகதி திங்கட்கிழமை நாடு முழுவதும் 1,352 பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தேசிய கல்வி அமைச்சர் Édouard Geffray அறிவித்துள்ளார். மேலும் 4,042 கல்வி நிலையங்கள் விசேட ஏற்பாடுகளுடன் இயங்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சில இடங்களில் மாணவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்படுவதுடன், குளிர்சாதன வசதியுள்ள நூலகங்கள் மற்றும் மாற்று அறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வாரம் காலை நேரத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்வுகளும் மற்றும் வாய்மொழி தேர்வுகளும் வழமையான முறையில் நடைபெறும் என அமைச்சர் உறுதிப்படுத்தினார். பிற்பகல் நடைபெறும் தேர்வுகள் தொடர்பாக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் நிலைமைகள் பரிசீலிக்கப்பட்டு, பாதுகாப்பான சூழல் உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Paris நகரில் ஜூன் மாதத்திற்கான அதிகூடிய வெப்பநிலை சாதனை பதிவாகியுள்ளது. தலைநகரில் இன்று 37.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் 1947 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி இதே அளவிலான வெப்பநிலை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire