ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய கருத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரிப்பு
23 ஆனி 2026 செவ்வாய் 05:39 | பார்வைகள் : 1366
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் தனது கட்டளைகளை பின்பற்றுகிறது என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய கருத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
இஸ்ரேலின் ஜெருசலேத்தில் நடந்த சர்வதேச உச்சிமாநாட்டில் பிரதமர் நெதன்யாகு பேசியதாவது: ஜனாதிபதி ட்ரம்ப் விரும்புவதையெல்லாம் செய்வதில்லை, நானும் அவர் விரும்புவதையெல்லாம் செய்வதில்லை.
நாங்கள் சுதந்திரமான மற்றும் பெருமைமிக்க நாடுகளின் தலைவர்கள், சில சமயங்களில் எங்கள் கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போவதில்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது.
அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், இருநாட்டு தலைவர்களும் தேசிய செயல் திட்டங்களுக்கே முன்னுரிமை அளித்து வருகிறோம். நாங்கள் எங்கள் நலன்களுக்காக நிற்கிறோம்.
இஸ்ரேலின் நலன்களுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நான் நிற்கிறேன். பல நேரங்களில் நாங்கள் ஒருமித்த கருத்துடன் இருப்போம். சில சமயங்களில் அவ்வாறு இருப்பதில்லை.
நாங்கள் ஒருவருக்கொருவரின் இறையாண்மை, தலைமைத்துவம் மற்றும் எங்கள் மக்கள் மீதான அர்ப்பணிப்பை மதிக்கிறோம். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire